புதுடெல்லி:
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, குஜராத், மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி அரசின் சார்பில் மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பெரும்பாலான மாநிலங்களில் கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும், அதற்கான பலன் கிடைக்கவில்லை.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் திங்கட்கிழமைக்குள் (டிசம்பர் 7) பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், இமாசலபிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், படுக்கை வசதி குறைபாடுகள் தொடர்பாக மாநில அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.