இஸ்ரேலின் முக்கிய தளபதி படுகொலை- ஈரான் பழி தீர்த்ததா.?

இஸ்ரேலின் தேசிய புனைவு அமைப்பின் தளபதி சுட்டு கொல்லப்பட்டதாக இணையத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

ஈரானின் அணு ஆயுதங்களின் தந்தை என்று அழைக்கப்படும் மூத்த அணு விஞ்ஞானி சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் செய்தது என்று ஈரான் குற்றம் சாட்டி வந்தது.

இந்நிலையில் இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பான மொசாட் தளபதி படுகொலை செய்யப்பட்டதாக இணையத்தில் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேல் நகரமான டெல் அவிவ் பகுதிய்யில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த காணொளியில் சிக்னலில் வெள்ளை நிற கார் ஒன்று நிற்கிறது.

இந்த வாகனத்தை சூழ்ந்த மர்மநபர்கள் வாகனத்தில் இருந்தவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துச் செல்கின்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரின் வாகனங்கள் அதிகளவில் குவிந்து நிற்கின்றன. இந்த தாக்குதலில் காரிலிருந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தாக்குதலில் 45 வயதான தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஃபாஹ்மி ஹனாவி கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here