பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி

இஸ்லாமாபாத்,ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஆப்கானிஸ்தான் எல்லையான வசிரிஸ்தான் நகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர்.

அப்போது ராணுவ வீரர்களை குறிவைத்து அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராணுவ தளபதி உள்பட 6 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here