600 கோடிக்கு அசத்தல் திட்டம் – மூக்கை நுழைக்கிறது சன் பிக்சர்ஸ்!

தென்னிந்திய சினிமாவில் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரையில் சன் டிவி நிறுவனம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பல சேனல்கள் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் முன்னணி சேனலாக இருப்பது தான் அதனுடைய பலமே. அப்பேற்பட்ட சன் டிவி நிறுவனம் தொலைக்காட்சிகள் மட்டுமின்றி, படம் தயாரிப்பது, OTT நிறுவனம் என தனித்தனியே இயங்கி வருகிறது.

இந்நிலையில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உலக சினிமாவுக்கே சவால் விடும் வகையில் தன்னுடைய OTT நிறுவனத்தை பெரிய அளவில் உருவாக்க உள்ளார்களாம். அதற்கான அடிப்படை வேலைகள் தற்போது தொடங்கி விட்டதாக தெரிகிறது.

முன்னதாக படங்களை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த சன் டிவி நிறுவனம், தற்போது சன் டிவிக்காக பிரத்யேகமாக படங்களை தயாரித்து, பண்டிகை தினங்களில் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது. அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளது சன் டிவி.

தீபாவளிக்கு நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தை நேரடியாக டிவியில் வெளியிட்டதை போல, வருகிற பொங்கலுக்கு விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் புலிகுத்தி பாண்டியன் என்ற படத்தையும் நேரடியாக ஒளிபரப்ப உள்ளார்களாம்.

இதையும் தாண்டி புதிய யுக்தியுடன்  600 கோடி பட்ஜெட்டில் சன் நெக்ஸ்ட் OTT நிறுவனத்திற்காக படங்கள், வெப் சீரிஸ் என தொடர்ந்து தயாரிக்க உள்ளார்களாம். மிக விரைவில் அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த OTT நிறுவனங்களுக்கு சவாலாகவும் இது அமையும்  என்று பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here