கொரோனாவை வென்ற 104 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர்

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், 104 வயதான முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், COVID-19 நோயிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றுப் போரிட்ட அனுபவமுள்ள மேஜர் லீ வூட்டன், கடந்த வாரம் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தார்.

தமது 104ஆவது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர், மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். மருத்துவமனை ஊழியர்கள், அவரைச் சிறப்பான வாழ்த்துகளோடு வழியனுப்பி வைத்தனர்.

மேஜர் வூட்டனின் 104 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், நண்பர்களும் உறவினர்களும் அவரது வீட்டுக்கு வெளியே வாகனங்களில் அணிவகுத்து அவருக்கு வாழ்த்தொலி எழுப்பிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here