திணறும் ட்விட்டர்.. திடீரென மோதிக் கொண்ட அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள்!

சென்னை:
தளபதி விஜய், தல அஜித், சூர்யாவின் ரசிகர்கள் திடீரென ட்விட்டரை தங்கள் வசமாக்கி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபிக்கு ட்விட்டர் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய கவுரவத்தை கொடுத்ததும் தளபதி ரசிகர்கள் #VIJAYRuledTwitter2020 என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற 3 ஆவது டி20 போட்டியில் அஜித் ரசிகர்கள் தமிழக வீரர் நடராஜனை வாழ்த்திய பேனரை காண்பித்த நிலையில், #ThalaFansWishesNATARAJAN ஹாஷ்டேக் டிரெண்டானது.

சூர்யா ரசிகர்கள் மட்டும் என்ன சும்மா இருப்பார்களா, #SURIYARuledTwitter2020 என்ற ஹாஷ்டேக்கை தெறிக்க விட்டு வருகின்றனர்.

அகில இந்திய அளவில் 2020 ஆம் ஆண்டில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்ட் என்றால், அது நம்ம தளபதி விஜய் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்தபோது, நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த அந்த மாஸ் செல்ஃபி புகைப்படம் தான் என ட்விட்டர் இந்தியாவே அங்கீகாரம் கொடுத்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக மாஸ்டர் படக்குழு ஒட்டுமொத்த (ஏரியா) இந்தியாவில் அய்யா கில்லி டா என, அந்த அழகான நேரத்தை வெளியிட்டு #VIJAYRuledTwitter2020 ஹாஷ்டேக்கை கொண்டாடி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here