சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சித்ராவுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
இதையடுத்து சமீபத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் எளிமையாக இவரது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் நிச்சயக்கப்பட்ட ஹேம்நாத்துடன் தனியார் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது டிவி நடிகை சித்ரா இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவான்மியூரைச் சேர்ந்த சித்ரா நசரத்பேட்டை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து டிவி தொடரில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது