150 மில்லியன் செல்சியஸ் வெப்பம் தரும் செயற்கை சூரியன்! – சீனா

இயல்பாக மனிதர்களின் உடல்நிலை வெப்பம் 37 டிகிரி செல்சியஸ் மட்டுமே. இதற்கு ஓரிரு செல்சியஸ் அதிகமானாலே காய்ச்சலில் உடல் நொந்துவிடும்.
சீனாவில் 150 மில்லியன் செல்சியஸ் வெப்பம் தரும் அணு உலை அமைத்திருக்கிறார்கள். அப்படியெனில், அது தரும் வெப்பத்தின் அளவை மனதில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

மின் ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அணு உலைகள் உலகம் முழுவதும் அமைக்கப்படுகின்றன. அவற்றின் பலன்களும் இழப்புகளும் அடிக்கடி விவாதிக்கப்படுவது வழக்கம்.

வழக்கமாக அணுத்துகள் பிளவுகள் மூலம் அணு உலைகள் இயங்கும். அதற்கு மாறாக அணுத் துகள்களை பிணைப்பதன் மூலம் ஆற்றலைப் பெற முடியும் என சீனாவில் கண்டறியப் பட்டுள்ளது.

அதன் விளைவாக சீனாவில் செங்கடுக்கு அருகே நியூக்களியர் கார்ப்பரேஷனில் அணுக்கரு பிணைப்பு உலையை அமைத்தனர். அதில்தான் சூரியனை விடவும் அதிக வெப்பம் தருவது தொடங்கியிருக்கிறது.

இதன்மூலம் கதிர்வீச்சு வெளிப்படாது, அணுக்கழிவுகள் வராது என்றும் கூறப்படுகிறது. இதைப் போலவே மற்ற நாடுகளிலும் அணுக்கரு பிணைப்பு உலைகள் அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here