நயன்தாரா ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார். இந்த நிலையில் மற்றொரு இந்திப் படத்தில் நடிக்கவும் நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.
தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா நடித்திருந்த ‘ஜவான்’ படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியதோடு நயன்தாராவை இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கி உள்ளது.

இந்நிலையில் புகழ்பெற்ற இந்தி இயக்குநரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி அதிக பட்ஜெட்டில் ‘பைஜூ பாவ்ரா’ என்ற பிரம்மாண்ட படத்தை எடுக்க இருக்கிறார்.
இதில் நாயகனாக ரன்வீர் சிங், நாயகியாக அலியாபட் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தில்தான் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா நடித்தால் படத்துக்கு மேலும் பரபரப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.





















