போர்ப்ஸின் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த டாப் 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபலமான போர்ப்ஸ் இதழ் ஆண்டு தோறும் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் பெயர் இடம் பெற்றால் பெரிய கவுரமாக கருதப்படுகிறது.

போர்ப்ஸ் இந்த ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளார்.

ஏஞ்சலா மெர்க்கல் தொடர்ந்து 10  ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஐரோப்பிய ரிசர்வ் வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே உள்ளார்.

மூன்றாவது இடத்தில் இந்திய வம்சாவளி அமெரிக்கரும், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் உள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவிலிருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (41வது இடம்), எச்.சி.எல். கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா (55வது இடம்), பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார் ஷா (68வது இடம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here