ஜப்பான் நூலகங்களில் அல்ட்ரா வயலட் கருவி

நூலகங்கள் அறிவின் வாசல்களாக இருப்பதில் சந்தேகமில்லை. ஆனால், கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் நோய்களை பரப்பும் ஆபத்துகளும் உள்ளதாக சுகாதார மையம் எச்சரிக்கை செய்துள்ளது .
பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினாலும், அறிவின் வாசல்களை திறக்கும் நூலகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
சுகாதார நடவடிக்கைகளுடன் நூலகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன. ஜப்பானில், நூலகங்கள மூடவில்லை என்றாலும், சுகாதார நடவடிக்கைகளுக்காக புதுமையான முறைகளை கடைபிடித்துள்ளது.
வாசகர்களுக்கு பல சுகாதார கட்டுப்பாடுகள் இருந்தாலும், நூல்களை சுத்தம் செய்வதற்காக, ஒவ்வொரு நூலகத்திலும் அல்ட்ரா வயலட் மூலம் சுத்தம் செய்ய நவீன கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வாசகர்கள் படித்துவிட்டு வைக்கும் புத்தகங்களை, நூலகர்கள் அந்த இயந்திரத்துக்குள் வைத்து உடனடியாக சுத்தம் செய்கின்றனர். கிருமிகள், தூசிகளை அந்த இயந்திரம் சுத்தம் செய்து விடுகிறது.

2018 ஆம் ஆம் ஆண்டிலிருந்து இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து நூலகங்களிலும் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாசகர்கள் புத்தகத்தை எடுக்கும் பொழுதும், படித்துவிட்டு புத்தகத்தை திரும்ப வைக்கும்போழுதும் இந்த இயந்திரத்துக்குள் வைத்து சுத்தம் செய்யப்படுகிறது. எனினும் இந்த நடைமுறை கட்டாயம் அல்ல என்றும், பார்வையாளர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, புத்தகத்தை இந்த இயந்திரத்துக்குள் வைத்து சுத்தம் செய்வதை வாசகர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கான புத்தகத்தை இந்த இயந்திரத்துக்குள் வைத்து சுத்தம் செய்யப்படுவதை மக்கள் விரும்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here