ஊடுருவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் – அச்சத்தில் உலகம்!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கிய கொடிய நோயான கோவிட்-19 சீனாவில் இருந்து தான் தொடங்கியது என பல்வேறு நாடுகளில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து முன்னாள் அமெரிக்கா அதிபர் டிரம்ப் நேரடியாக சீன அதிபர் ஷி ஜின் பின்க்கை குற்றம் சாட்டினார்.இந்நிலையில் இன்னும் அந்த கொடிய நோய் தொற்று முழுமையாக நிறைவு பெறாத நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பலர் இரகசியமாக பல்வேறு நிறுவனங்களில் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையுடன் சீனா முதலிடம் பெற்றுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஆள்வதற்காக பல திட்டங்களை வகுத்து வந்த சீனா, தங்கள் ராணுவ பலத்தை பல்வேறு நாடுகளில் கூட்டி வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சீனாவின் திட்டங்கள் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி உலகிலுள்ள பல்வேறு வங்கிகள், தயாரிப்பு, நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் போன்று பல்வேறு துறைகளில் சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் பலர் ரகசியமாக வேலை செய்து வந்த தகவல் ஆங்கில ஊடகம் ஒன்றால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அவர்களின் பெயர்கள் வெளிவராத நிலையில், ஸ்டாண்டர்ட் டு சாட்டர்ட், எச்எஸ்.பி.சி போன்ற இரண்டு வங்கிகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் சுமார் 700 க்கும் அதிகமானோர் இருந்தது தெரியப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இது போன்ற நிறுவனங்களில் 79 ஆயிரம் சீன கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் செயல்பட்டு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here