சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் குஷ்பு நிறுத்தும் !

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியாக இருந்தபோதும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி ஆனபோதும் அங்கே 2011, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றவர் ஜெ.அன்பழகன்.

நடிகை குஷ்பு திமுகவில் இருந்தபோதும், கூட்டணியான காங்கிரசில் இருந்தபோதும் மறைந்த ஜெ.அன்பழகனுடன் நல்ல நட்புடன் இருந்தவர்.

அன்பழகனுடன் திமுக போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டவர் குஷ்பு. அந்த வகையில் அத்தொகுதியில் அவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. மேலும், குஷ்பு இஸ்லாமியர் என்பதால், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை கவர்ந்திடவும் குஷ்புவால் முடியும் என்று நம்பும் பாஜக, சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக குஷ்புவை நியமித்திருக்கிறது.

77 முதல் திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது இந்த தொகுதி. 91ல் மட்டும் அதிமுக கைப்பற்றியது.

பொறுப்பாளராகவே இருந்து பாஜகவின் வெற்றிக்கு பாடுபடுவாரா? இல்லை, வேட்பாளராகவும் களம் இறங்கி போராடுவாரா குஷ்பு என்பது போக போகத்தான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here