விவசாயிகள் போராட்டம் குறித்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இன்றும் டிரெண்ட் ஆகி வருகிறது. பெரும்பாலானோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவும், மற்றவர்கள் போராட்டத்திற்கு எதிராகவும் தங்களின் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
வைரல் புகைப்படங்களில் பல்வேறு காய்கறி வகைகள் தள்ளுவண்டிகளில் வரிசைகட்டி அழகாக நிற்க வைக்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே அரங்கில் நிற்க வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க சூப்பர் மார்கெட் போன்றே காட்சியளிக்கிறது.
புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப் ஒன்றில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இதனை பெங்களூரை சேர்ந்த தம்பிகள் துவங்கினர். பெங்களூரில் விவசாயிகள் சொந்தமாக சூப்பர் மார்கெட் துவங்கியது பற்றி இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.
அந்த வகையில் வைரல் புகைப்படங்களில் இருப்பது உண்மையில் விவசாயிகள் துவங்கிய சூப்பர் மார்கெட் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.