ஜோகூர் சட்டமன்றக் கலைப்பு, அரசியல் நாடகம் அல்ல; மக்களிடம் அதிகாரம் வழங்கவே இந்நடவடிக்கை- ஜாஹிட்

கோலாலம்பூர்:

கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைச் ஒரு சிலர் ‘அரசியல் நாடகம்’ என விமர்சிப்பதை பாரிசான் நேஷனல் (BN) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான பிஎன் தேர்தல் இயந்திரத் தொடக்க விழாவில் உரையாற்றிய துணைப் பிரதமர், சுய இன்பத்திற்காகப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்காமல், ஒரு ஸ்திரமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும், முழுமையான அதிகாரத்தை மக்களிடமே ஒப்படைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

சட்டமன்றக் கலைப்பு என்பது ஜனநாயக அமைப்பில் தவிர்க்க முடியாத ஒரு செயல்முறை என்றும், ஜோகூரைத் தொடர்ந்து நெகிரி செம்பிலானும் தனது சட்டமன்றத்தைக் கலைத்திருப்பது இது ஒருதலைப்பட்சமான அரசியல் நகர்வு என்பதை அல்ல என்பதை நிரூபிப்பதாகக் கூறிய அவர், மக்கள் தங்களுக்கு வேண்டிய தகுதியான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கட்டும் என்றும் கூறினார்.

மேலும், அம்னோவும் பிஎன்-னும் ஜோகூரில் அழியும் எனக் கூறிவந்த எதிர்க்கட்சிகளைச் சாடிய அவர், துரோகத்தால் பிறந்து தற்போது தங்களுக்குள் பிளவுபட்டுத் தவிக்கும் அந்த கட்சிகளுக்குக் கொள்கைகளைப் பேச அருகதை இல்லை என்றும், ஜோகூர் அரசியல் பழிவாங்கலுக்கான சோதனைக்களம் அல்ல என்றும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here