விவசாயி வீட்டில் விருந்து சாப்பிட்ட உள்துறை மந்திரி அமித்ஷா

வேளாண் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்கில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பலிஜுரி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு நண்பகலில் மத்திய மந்திரி அமித்ஷா சென்றார்.
அவருடன் பா.ஜ.க. பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா , மேற்கு வங்காள மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் உடன் சென்றனர்.
அவர்கள் அனைவரும் விவசாயியின் வீட்டில் தரையில் அமர்ந்தபடி மதிய உணவு சாப்பிட்டனர். இதுகுறித்து அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், மிட்னாப்பூரின் (மேற்கு வங்காளம்) பெலிஜுரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜுனு சிங் ஜி , ஸ்ரீ சனாதன் சிங் ஜி ஆகியோர் வீட்டில் சுவையான மதிய உணவை சாப்பிட்டேன்.
எங்களுக்கு பலத்த வரவேற்பு அளித்து, அன்பு காட்டிய அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here