4 போர்களில் அடி வாங்கிய பிறகும் பினாமி போரில் ஈடுபடும் பாக்கிஸ்தான் -ராஜ்நாத் சிங்

 4 போர்களில் தோற்ற பிறகும், தீவிரவாதத்தின் மூலம் பினாமி போர்களை பாக்கிஸ்தான் நடத்தி வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் துண்டிகலில் விமானப்படை அகாடமி உள்ளது. இந்த அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ராஜ்நாத் சிங் பேசுகையில், மேற்கு செக்டாரில்,நமது அண்டை நாடான பாக்கிஸ்தான் எல்லையில் தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நான்கு போர்களில் தோற்ற பிறகும், தீவிரவாதத்தின் வாயிலாக அவர்கள் தொடர்ந்து பினாமி போர்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முயற்சிகளை எச்சரிக்கையுடன் எதிர்க்கும் பாதுகாப்பு படையினரை நான் பாராட்ட விரும்புகிறேன். இந்திய விமானப்படைக்கு ஒரு புகழ்பெற்ற வரலாறு உண்டு. இது எப்போதும் துணிச்சலான அத்தியாயங்களை காண்பிக்கும். 1971 இல் நடந்த லோங்கேவாலா போர் முதல் சமீபத்திய பாலகோட் வான்வழித் தாக்குல்கள் வரையிலான அனைத்தும் நம் நாட்டின் வரலாற்றில் தங்க அத்தியாயங்களாக கருதப்படும்.

பாலகோட்டில் இந்திய விமானப்படை ஒரு பயனுள்ள செயலை (தாக்குதல்) செய்து, நாட்டின் ஆற்றலும் தீவிரவாதத்துக்கு எதிரான அதன் தீர்மானத்தையும் உலகத்துக்கு உணர செய்தது.

ஒருவர் நாட்டுக்காக அனுப்பியவர்களாக (ராணுவ வீரர்) இருப்பது அதிர்ஷ்டம். உங்கள் கடமைக்கு நீங்கள் அனைவரும் நியாயம் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here