சிறையில் உள்ள இஷ்ரத் ஜகான் மீது மீண்டும் தாக்குதல்..!

வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் கடுமையான உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், மண்டோலி சிறையில் கைதிகளால் மோசமாக தாக்கப்பட்டதாகவும் தொடர்ந்து சிறையில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.

கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், இஷ்ரத் ஜஹானின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும், தனது புகார்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவருவதற்காக அவர் மேலும் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றம் நாளை இது தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இருந்தால் குறிப்பிடவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறதா என்று நீதிபதி மண்டோலி சிறை உதவி கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, அவர் தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தினார். மேலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதி சிறை அதிகாரியிடம், “இஷ்ரத் ஜஹான் முழு அச்சத்தில் இருப்பதாக தெரிகிறது. தயவுசெய்து அவருடன் உடனடியாகப் பேசுங்கள்,  நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள். அவருடைய பயத்தைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்.” எனத் தெரிவித்தார்.

மேலும் வீடியோ கலந்துரையின் மூலம் இஷ்ரத் ஜகானை நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தும்படி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இது, அவர்மீது சிறையில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here