கோலாலம்பூர்:
இந்த வாரத்திற்கான (ஏப்ரல் 23 – ஏப்ரல் 29 வரை) எரிபொருள் விலைகள் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 85 காசுகள் குறைக்கப்பட்டு, தற்போது 5.12 ரிங்கிட்டாக விற்பனை செய்யப்படுகிறது.
RON 97 பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் குறைக்கப்பட்டு, 4.85 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மானியம் இல்லாத RON 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைக்கப்பட்டு, 3.87 ரிங்கிட்டாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சபா, சரவாக் & லபுவான் ஆகிய இடங்களில் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற அளவிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
BUDI95 திட்டத்தின் கீழ் மானியம் பெறும் RON 95 பெட்ரோல் விலை வழக்கம் போல லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற விலையிலேயே தொடரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.





















