கொழும்பு-
மேலும் தமிழக மீனவர்களின் படகுகள், வலைகளையும் சேதப்படுத்துகிறார்கள். அதேபோல் இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களை தாக்குகிறார்கள்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா – இலங்கை இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வேண்டும் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்திய அரசு இலங்கையிடம் வலியுறுத்தி இருக்கிறது.
இதனால் மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற சூழ்நிலையில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளனர்.
இலங்கை பருத்தித்துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களின் படகுகளைச் சிறைபிடித்து கொண்டு வாருங்கள். இல்லையென்றால் படகுகளின் எண்களையாவது கொண்டு வாருங்கள்.
இந்திய மீனவர்களின் படகுகளை என்னிடம் ஒப்படையுங்கள். வரும் பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வசனம் பேசியிருக்கிறார் டக்ளஸ்