3 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரம்: 14 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

கோலாலம்பூர்:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவரது 14 வயது வளர்ப்பு மகளை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 59 வயது வியாபாரி ஒருவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி வான் நோர் அக்லிமா வான் சாலே முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, பிரதிவாதி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

ஜூலை 2013-இல், மாலை 4.30 மணியளவில் கோலா நெரஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வைத்துத் தனது 14 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டில் டிசம்பர் 2013-இல், நண்பகல் 12 மணியளவில் அதே கோலா நெராஸ் மாவட்டத்தில் உள்ள மற்றொரு கடையில் வைத்து மீண்டும் அதே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சுமத்தப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரதிவாதிக்கு RM20,000 பிணைத் தொகை மற்றும் ஒரு பிணையாளருடன் பிணை வழங்க அனுமதித்தது.

மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட சிறுவையைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், ஒவ்வொரு மாதமும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இவ்வழக்கின் மறுவிசாரணை வரும் அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நூர் அனித் நபிலா ருஸ்லி ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here