மலை பாங்கான இடத்தில் குட்டி ஈன்ற தாய்.. மழை பெய்ததால் அரண் போல் நிற்கும் யானைகள்

மலை பாங்கான இடத்தில் குட்டி ஈன்ற தாய்.. மழை பெய்ததால் அரண் போல் நிற்கும் யானைகள்.

மனிதர்களுக்கு கர்ப்ப காலம் என்பது 10 மாதங்களாகும். இதில் 7 மாதத்திலிருந்தே பிரச்சினைகளுக்கேற்ப குழந்தைகள் பிரசவிக்கப்படுகின்றன. விலங்குகளுக்கும் கர்ப்ப காலம் இருக்கிறது.

அதில் யானைக்கு 22 மாதங்களாகும். பிறக்கும் குட்டி யானை 110 கிராம் எடையுடன் பிறக்கும். நீளமான கர்ப்ப காலம் இருக்கும் பாலூட்டிகளில் ஒன்று யானையாகும்.

இந்த நிலையில் யானை குட்டி போடும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு வெட்ட வெளியில் யானை ஒன்று குட்டி போட தயாராகிறது. அப்போது குட்டியை வெளியே தள்ள அழுத்தம் கொடுக்கிறது.

அப்போது ஒரு வெள்ளை நிற பையிலிருந்து குட்டி கீழே விழுகிறது. அந்த வெள்ளை நிற படலத்தை கிழித்து கொண்டு குட்டி உருளுகிறது. அப்போது அங்கு மழை பெய்கிறது.

உடனே உடனிருக்கும் யானைகள் தாய் யானையுடன் சேர்ந்து அந்த குட்டியைச் சுற்றி அரண்போல் நிற்கின்றன. இதனால் அந்த குட்டி மழையில் நனையாமல் பாதுகாக்கப்படுகிறது. இது புது வரவான குட்டி மீது அந்த யானைகளுக்கு இருக்கும் பாசத்தை காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here