நியூயார்க்-
புத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்து உள்ளன.
இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்து உள்ளன.
இதையடுத்து, சீனாவில் 35,615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்காளதேசத்தில் 9,236, காங்கோவில் 8,640 குழந்தைகள் பிறந்து இருக்கின்றன.
இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் மதிப்பிட்டு உள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு முன் இருந்ததைவிட மிக வித்தியாசமான உலகில் நுழைந்து உள்ளார்கள்.









