ஆலயத்திற்கு நிலப்பட்டா கிடைக்க உதவி செய்தவர்களுக்கு நன்றி

பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் ஹங் செங் ஶ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்திற்கு நிலப்பட்டா கிடைக்க பேருதவி வழங்கிய அனைத்து தரப்பினருக்கு ஆலயத் தலைவர் தர்மபாலன் ராஜு ஆலயத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பல ஆண்டுகளாக நிலப்பட்டா கிடைக்க பெறும் முயற்சியை ஆலயத்தின் சார்பாக மேற்கொண்டிருந்தோம்.

ஆனால் இம்முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கிய மலேசிய இந்து சங்கத்தின் விலாயா மாநிலத் தலைவர் மாணிக்கவாசகம் கதிரேசன், விலாயா மாநில துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சந்தாரா, மாநில நில அலுவலகம், கோலாலம்பூர் நகராண்மைக்கழக டத்தோ பண்டார் ஆகியோரின் உதவியால் ஆலயத்திற்கு நிலப்பட்டா கிடைத்தது என்றார்.

அதே வேளை ஆலயத்துணைத்தலைவர் செல்வராஜா பரமானந்தா, பொருளாளர் வீர அவினாஷ் தர்மபாலன், செயலாளர் பார்த்திபன் முனியாண்டி ஆகியோரின் முயற்சிக்கும் ஆலய உறுப்பினர்கள் சார்பாக ஆலயத்தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here