அறுப்புக்கோழிகளுக்கு பினாங்கில் தடை !

ஈரமான சந்தைகளில் கோழியை அறுப்பதற்கான தடையை பினாங்கு மாநில நகராட்சி மன்றம் விதித்திருக்கிறது. விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப்  புதிய கோழியைத் தரவே விரும்புகிறார்கள் .

ஆனால், இந்த வாரம் புதிய அறுப்புக் கோழிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருப்பது விற்பனையாளர்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது.

பினாங்கு தீவின்  தூய்மை கருதியே இந்நடவடிக்கையை மேற்கோண்டிருப்பதாக    பினாங்கு மாநில  ஆட்சிக்குழு கூறியிருக்கிறது.

அனைத்து விற்பனையாளர்களும் இனிமேல் ஒரு விநியோகஸ்தரிடமிருந்தே தங்கள் கோழிகளைப்  பெற வேண்டும் என்ற கருத்தும்  நிலவுகிறது. இதை  மாநில ஆட்சிக்குழு  மறுத்திருக்கிறது.

பினாங்கு தீவில் 200 க்கும் மேற்பட்ட கோழி விற்பனையாளர்கள் இருக்கின்றனர். புதிய அறிவிப்பால்  தங்கள் வணிகத்தில் பாதிப்பு  ஏற்படும் என்று  கூறியுள்ளனர்.

புதிய அறிவிப்பைச் செய்யுமுன் உள்ளூர் கோழிகள் விறபனையாளர்களிடம்   ஆலோசித்திருக்க வேண்டும் என்று விறபனையாளர்கள் கூறினர்.

மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய தீர்ப்பின் கீழ், விற்பனையாளர்கள் உறைந்த கோழியை மட்டுமே விற்க வேண்டும். மேலும்  சுகாதார நோக்கங்களுக்காக குளிரூட்டிகளில் சேமிக்கப்படவும் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here