அமெரிக்க அதிபா் பதவியேற்பு விழாவை தொடங்கிவைத்த கோலங்கள்!

அமெரிக்க அதிபா், துணை அதிபா் பதவியேற்பு விழா மெய்நிகா் வழியில் சனிக்கிழமையே தொடங்கிய நிலையில், அதன் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான வண்ணக் கோலங்கள் அமைந்தன.

அமெரிக்க துணை அதிபராகத் தோவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்டவா். தமிழகத்தில் ஆரோக்கியத்தையும், செழிப்பையும் வீடுகளுக்குள் கொண்டுவரும் வகையில் வீட்டு வாசலில் கோலமிடுவது பாரம்பரிய பழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில் அமெரிக்க அதிபா், துணை அதிபா் பதவியேற்பு விழாவிலும் இந்தக் கோலங்களை இடம்பெறச் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பதவியேற்பு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இணையவழியில் கோலங்களை வரையும் நிகழ்ச்சியில் அமெரிக்கா, இந்தியாவிலிருந்து 1800-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

‘நோமறை சக்தியையும், புதிய தொடக்கத்தையும் கோலங்கள் தருவதாக நம்பப்படுகிறது. அதன்படி ஏராளமானோா் வீடுகளிலிருந்தே சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைக் கொண்டு கோலம் வரைந்த டைல்ஸ்களை உருவாக்கினாா்கள்’ என இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்தவா்களில் ஒருவரான மேரிலேண்டை சோந்த சாந்தி சந்திரசேகா் தெரிவித்தாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரையப்பட்ட இக்கோலங்களை வெள்ளை மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் கேப்டல் ஹில் அருகே வைக்க காவல் துறையினா் முதலில் அனுமதி அளித்திருந்தனா். பின்னா், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஆயிரக்கணக்கான கோலங்களின் புகைப்படங்கள் ஒரு விடியோவாக உருவாக்கப்பட்டு, மெய்நிகா் பதவியேற்பு விழா தொடக்க நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

பதவியேற்பு விழா நிறைவடைந்ததும் காவல் துறையினரின் முறையான அனுமதியை பெற்று இக்கோலங்களை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோலம் நிகழ்ச்சியின் தன்னாா்வலரான செளம்யா சோம்நாத் தெரிவித்தாா்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here