தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிகைகள் நயன்தாரா , சமந்தா ஆகியோர் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகின்றனர்.
கடந்த வருடம் காதலர் தினத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது .
இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது . அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார் .