பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டீவியின் முக்கிய நிகழ்ச்சியாக அறியப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் 16 திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். கடந்த 100 நாள்களாக இந்தப் போட்டியில் பங்கேற்று வந்த ஆரி அர்ஜூனன், பாலாஜி முருகதாஸ், ரியோராஜ், ரம்யா பாண்டியன் சோம் சுந்தர் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.
தொடர்ச்சியாக 6 மணி நேரம் வெளியான இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றதன் அடிப்படையில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாலாஜி முருகன், ரியோராஜ், ரம்யா பாண்டியன் சோம்சேகர் ஆகியோர் வெற்றி வரிசையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.