நாட்டுத்துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் விவசாயி பலி. வேட்டைக்கு சென்றபோது விபரீதம்.

கோவை

தொண்டாமுத்தூர் அருகே நள்ளிரவில் பன்றி வேட்டைக்கு சென்றபோது தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே தீத்திப்பாளையம் வன கிராமத்தில் வசிப்பவர் விவசாயி அய்யாச்சாமி(40). இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, ஆனந்த் உள்ளிட்டோருடன் வனப்பகுதிக்கு பன்றி வேட்டைக்கு சென்றுள்ளார். வேட்டையாடுவதற்காக அனுமதி இல்லாத நாட்டுத் துபாக்கியை அவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் வனப்பகுதிக்குள் சென்றபோது உடனிருந்தவர்கள் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி ஒன்று எதிர்பாராத விதமாக மரக்கிளையில் பட்டு வெடித்துள்ளது.

இதில், அய்யாசாமி மீது குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வனகிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராமசாமி உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here