கல்வான்: சீன மோதலில் வீரமரணம்- கர்னல் சந்தோஷ் பாபுக்கு மகாவீர் சக்ரா-தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா

டெல்லி:
லடாக் எல்லையில் கல்வான் (கால்வன்) பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. இம்மோதலில் வீரமரணம் எய்திய தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு வீர்ர் சக்ரா விருது வழங்கப்படும்.

தேசத்தின் 72- ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி உட்பட நாடு முழுவதும் கோலாகலமான ஏற்பாடுகள், கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவின் உயரிய ராணுவ விருதுகளாக சக்ரா விருதுகளை பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் கால்வன் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள் சந்தோஷ் பாபு, பழனி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here