ஷா ஆலம்-
கப்பின் மலேசியா எனப்படும் மலேசிய இந்திய இயக்கங்கள் ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியப் பேராளர் மாநாடு அண்மையில் சிலாங்கூர், ஷா ஆலாம் கிளப்பில் நடைபெற்றது.
கோவிட் 19 காரணமாகமாநாடு கட்டுக்கோப்பாகவும்,இன்றைய சூழ்நிலைகள் அறிந்து குறித்த நேரத்தில் நிறைவு கண்டது.
மற்ற இயக்கங்களோடு இணைந்து இந்தியர்களின் பொது பிரச்சினைகளை விவாதிக்கவும், முறையான தீர்வுகாணவும் ஒன்று பட்டு செயல்படும் வகையில் கப்பின் தேசிய தலைவர் டாக்டர் சு.தென்னரசு, கப்பின் ஆலோசகரும், முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சின் தலைமை இயக்கனருமாகிய டத்தோ கண்டேசன் மலேசிய தமிழர் சங்கத்தின் தேசியத் தலைவர் வழக்கறிஞர் எம்.ஜே.கணேசன் ஆகியோரின் ஒருமித்த கருத்துரை காலத்துக்கு ஏற்றதாகவும் அனைவரின் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்தது.
மேலும், இந்நாட்டு இந்தியர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் பல்வேறு இயக்கங்கள் சமுதாய நலன்களுக்காக ஒன்றுபட வேண்டிய அவசியத்தையும் அவர்கள் தங்கள் உரையில் வலியுறுத்தினர்.
நாடு முழுவதுமிருந்து 60 பேராளர்கள், மகளிர், இளைஞர் பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர். புதிய தேசிய நிர்வாக குழுவும் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டது.
தேசியத் தலைவராக மீண்டும் ஜொகூர் டாக்டர். சு.தென்னரசு ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020/2023 ஆண்டுகளுக்கான இதர பொறுப்புகளுக்கும் கீழ்க்கண்டோர் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர் கே.தியாகராஜன்; உதவித்தலைவர்கள் டத்தோ.எம்.புஸ்பநாதன்,டத்தோ. எம்.பாஸகரன்,டத்தோ. கனகராஜா ராமன்; செயலாளர் ஏ.சந்திரன்; துணைச் செயலாளர் டாக்டர்.கே.ராஜன்; பொருளாளர் டாக்டர். ஆர்.கணேஷ்; தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ.நெல்சன் பி.முருகன்; மகளிர் பிரிவுத் தலைவி திருமதி டி.யோகேஸ்வரி; இளைஞர் பிரிவுத் தலைவர் பி.ஜித்தன், 15 செயற்குழு உறுப்பினர்களும் 2 கணக்காய்வாளர்களும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்