மோசமான ஜனாதிபதி” டொனால்ட் டிரம்ப் வீட்டின் மீது பறக்கும் விமானங்கள்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரது புதிய வீட்டின் மீது மோசமான ஜனாதிபதி எனவும் படுதோல்வி எனவும் பதாகைகள் கொண்ட விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

கடந்த வருடம் விறுவிறுப்பாக நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

நிலையில் ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைந்து ஜோ பைடன் பதவி ஏற்ற நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு அமெரிக்க அதிபர் ஜனாதிபதி வெளியேறி தற்போது ப்ளோரிடாவில் உள்ள ஒரு புதிய வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில் ஏற்கனவே அதிபராக இருந்தபோது சமூக வலைதளப் பக்கங்களில் அவரை கிண்டல் செய்யும் விதமாக பதிவுகள் வெளியிடப்பட்டு கொண்டிருந்தது வழக்கமாக இருந்தன.

தற்போது அவர் பதவியை விட்டு சென்றதற்குப் பின்பு அதிக அளவில் அது உருவெடுத்துள்ளது என்றுதான் கூறியாக வேண்டும். அதன்படி தற்போது டொனால்ட் வசித்து வரக்கூடிய ப்ளோரிடாவில் உள்ள புதிய வீட்டின் மேல் மோசமான அதிபர் எனவும் படு தோல்வி அடைந்தவர் எனவும் இரண்டு விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here