பிரேசிலில் சோகம்… விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்பந்து வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

அந்த வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் ஒரு தனியார் விமானத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் பால்மஸ் கால்பந்து கிளப்பைச் சேர்ந்த 5 வீரர்கள் சிறிய ரக விமானத்தில் பால்மஸ் நகரில் இருந்து கோயானியா நகருக்கு புறப்பட்டனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடுபாதையில் இருந்து மேலே செல்லும் போது அந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.

அத்துடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி பால்மஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் லூகாஸ் மெய்ரா, வீரர்களான லூகாஸ் ராஸ்டெஸ், குயில்லர்மொ, ரொனால்டு, மார்க்கஸ் ஆகிய 5 பேர் பலியானார்கள். அந்த வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தனர் என்று கிளப் செய்தித் தொடர்பாளர் இசபெலா மார்டின்ஸ் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு ஃபிஃபா இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என ஃபிஃபா டுவிட்டரில் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here