ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும், உலகின் மிகப் புகழ் வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுபவர். இவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், 2 நெடும் விவரிப்பு கவிதைகள் , பல பிற கவிதைகளும் அடங்கும்.
இவர் இயற்றிய ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல், மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம்.
இந்த நாடகத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான கெம்பே பீட்டர் எனும் வேலைக்காரன் வேடம் ஏற்றிருந்தார்.