நன்கொடையாளர்களை அரசியல் நிதி மசோதா பாதுகாக்க வேண்டும்: வான் சைபுல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் நிதி உதவி  மசோதா, நன்கொடையாளர்களை  பாதுகாக்க வேண்டும் என்று பெர்சத்து தகவல்  தொடர்பு  தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறுகிறார்.

தாசெக் குளுகோர்  நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் நிதி உதவியில் வெளிப்படைத்தன்மை  இருக்க வேண்டும்,        அதே சமயம்  அரசியல் கட்சிகளை ஆதரிப்பதால்  நன்கொடையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம்  தேவை  என்றார்.

செப்டம்பரில், அப்போதைய சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், நவம்பரில் அரசியல் நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.  ஆனால், அக்டோபரில் மசோதா தயாராகவில்லை என்றும், அது இன்னும் அரசாங்கத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் தனது தனிப்பட்ட கணக்கில் 681 மில்லியன் அமெரிக்க டாலர் (RM2.99 பில்லியன்) அரசியல் நன்கொடை பெற்றதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து அரசியல்வாதிகளும் NGO க்களும்  அரசியல் நிதி உதவிச் சட்டத்திற்கு   பல ஆண்டுகளாக  அழுத்தம் கொடுத்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here