சோவியத் விண்கலம் லூனா-9 முதன் முதலாக சந்திரனில் தரையிறங்கியது.

* 1931 – நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் கொல்லப்பட்டனர். * 1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா மார்ஷல் தீவுகளைக் கைப்பற்றியது. * 1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின. * 1969 – யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தேர்வானார். * 1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.
* 1989 – பராகுவேயில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து 1954-லிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெஸ்னர் பதவியிழந்தார். * 2006 – அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.