ராஞ்சி-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 36 மணி நேரத்திற்குப் பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறுநாள் இரவு மான்னு பகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் எந்தவிதமான நோயாலும் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 36 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.