வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கலாம்- சச்சின்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பேரிகார்டுகளை கொண்டு மிகப்பெரிய அரண்களை ஏற்படுத்தியுள்ளனர்..
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கலாம்: சச்சின் தெண்டுல்கர்
சச்சின் தெண்டுல்கர்
அதோடு அல்லாமல் இண்டர்நெட் சேவையை தடை செய்துள்ளனர்…. மின்சாரம், கழிப்பிட வசதிகளையும் தடை செய்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவான கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
.பா.ஜனதா தலைவர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ‘‘உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், பங்கேற்க முடியாது. இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். இந்திய இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here