விவசாய பிரச்சனைகளைப் பற்றி பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்துவிடுகின்றனர் என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ,
நாட்டு மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடிவடிக்கையை எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றன. கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வைக்கூட சிலர் கிண்டல் செய்தனர்.
ஏழைகள்கூட நாட்டின் ஒற்றுமைக்காக வீடுகளில் விளக்கு ஏற்றினர். ஆனால், அரசை எதிர்க்கவேண்டும் என்பதற்காக சிலர் கிண்டல் செய்தனர்.
விவசாய சட்டங்களால் ஏற்படும் விமர்சனங்களை நான் ஏற்கிறேன், பாராட்டுக்களை எதிர்க்கட்சிகள் ஏற்கட்டும். போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு வேளாண் சட்டங்களின் அவசியத்தை நாம் விளக்க வேண்டும்.