ஊழல் குற்றச்சாட்டு : இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

ஜெருசலம் :
நான் நிரபராதி, என் மீதான ஊழல் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை,” என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலில், அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. விசாரணைஇந்நிலையில், பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு, நேற்று ஜெருசலம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெஞ்சமின் நேதன்யாகு ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார். அவர், விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை பலரிடம் பெற்று, அதற்கு கைமாறாக, அவர்களுக்கு அரசு மூலம் பல்வேறு உதவிகளை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களை, நேற்று அவர் மறுத்தார்.தன் மீதான அனைத்து ஊழல் புகார்களும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்டவை என, தெரிவித்த அவர், சட்டத்தை காக்க வேண்டிய அமைப்புகள், ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
வலியுறுத்தல்தான் நிரபராதி என்றும், அவர் தெரிவித்தார். 20 நிமிடங்களுக்குப் பின், உச்ச நீதிமன்றத்திலிருந்து, அவர் வெளியேறினார்.
எனினும், அவரது வழக்கறிஞர்கள், தொடர்ந்து வழக்கு விசாரணையில் பங்கேற்றனர். நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே, ஏராளமானோர் கோஷமிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here