கொரொனா பற்றி அறியாதா கோமா சிறுவன் – தற்பொழுது அவனது நிலை என்ன?

கொரோனா தொற்று ஏற்பட்டுவதற்கு முன்பே விபத்து காரணமாக கோமாவில் இருந்த சிறுவனுக்கு இரண்டுமுறை கொரோனா தொற்று ஏற்படும் அவனுக்கு கொரோனா பற்றி எதுவுமே தெரியாத நிலையில் தற்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை சிறுவன் அடைந்து வருகிறானாம்.

கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் புரட்டி போட்ட கொரோனா வைரஸ் என்றாலே உலகம் முழுவதுமுள்ள சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கொரோனா என்ற பெயருக்கே தற்பொழுது ஒரு தனி பலம் வந்து விட்டது என்றும் கூறலாம். ஆனால், இந்த கொரோனா தொற்று தனக்கு இரண்டு முறை ஏற்பட்டும் கொரோனாவை பற்றி எதுவுமே தெரியாத ஒரு சிறுவனும் இருக்கிறான்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜோசப் எனும் சிறுவன் கடந்த ஆண்டு துவக்கத்திலேயே விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்கு சென்று உள்ளான். இவனது கோமா காலகட்டத்தில் தான் கொரோனாவும் உலகில் ஏற்பட்டுள்ளது.

இவன் கோமாவில் இருக்கும் போதே இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம். ஆனால், சிறுவனுக்கு கொரோனா பற்றி எதுவுமே தெரியாது என்று சிறுவனின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தற்பொழுதுதான் சிறுவன் கோமாவில் இருந்து மீண்டு வருவதாகவும், அவன் இருமுறை பாதிக்கப்பட்டும் கொரோனா பற்றித் தெரியாதவனாக இருந்தாலும் கோமாவில் இருந்து முழுமையாகக் குணம் அடைந்து விட்டார் என்றால், இப்படிப்பட்ட ஒரு கொடூரமான வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வருகிறதா என்று வியப்புடன் பார்ப்பான் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் சிறுவனின் மருத்துவச் செலவு அதிகமாக இருப்பதால் சிறுவனுக்கு நிதி உதவி அளிக்குமாறும் அவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here