மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்

திண்டுக்கல் :

கொடைக்கானல் அருகே 3000 ஆண்டுகள் பழமையான பூம்பாறை குழந்தை வேலப்பர் திருக்கோவில் தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ..

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் அருகே சுமார் 15 கிமீ தொலைவில் பூம்பாறை கிராம‌ம் அமைந்துள்ள‌து. இங்கு 3000 ஆண்டுக‌ள் ப‌ழ‌மையான ‌ அருள்மிகு குழந்தைவேல‌ப்ப‌ர் திருக்கோவில் அமைந்துள்ள‌து .

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த குழந்தை வேலப்பர் திருக்கோவில்.இந்த கோவில் விழாவின் துவக்கமாக கடந்த 30 ஆம் தேதி திருக்கொடியேற்று விழா நடைபெற்றது .

இந்த கொடியேற்றத்தை அடுத்து 31ஆம் தேதி அன்ன வாகனத்திலும் , 1 ஆம் தேதி மயில் வாகனத்திலும், 2 ஆம் தேதி காளை வாகனத்தில், 3ஆம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 4ஆம் தேதி பூத வாகனத்தில், 5 தேதி சிங்க வாகனத்திலும், ஆறாம் தேதி யானை வாகனத்திலும் குழந்தை வேலப்பர் ஆன முருகப்பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த மலர்ப்பாதை வழியாக திருத்தேர் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவிலை சுற்றி வந்தது. தொடர்ந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும் சாலைகளில் உருண்டும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் , சுற்றுலாப்பயணிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here