பாக்கிஸ்தான் இராணுவம் உள்ளூர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பாக்கிஸ்தான் ராணுவத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் வெளியில் வருவதில்லை என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் குழந்தைகளும் இருந்தனர் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.
பலூச் மாகாண குடியரசுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷெர் முகமது இரண்டு மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் ஏராளமான பெண்கள் , குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ட்விட்டரில் பல வீடியோக்கள் இராணுவ சீருடையில் உள்ள ஆண்கள் கூச்சலிட்டுக் கொண்டே உள்ளூர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை காட்டுகின்றன. இது குறித்து பாக்கிஸ்தான் அரசும் பாக்கிஸ்தான் ராணுவமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
பலுசிஸ்தான் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (போக்) உள்ளூர் மக்கள் மீது பாக்கிஸ்தான் இராணுவ அட்டூழியங்கள் நடைபெறுவது இது முதன்முறையல்ல.. ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச தளங்களில் பாக்கிஸ்தானின் மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை இந்தியா பல சந்தர்ப்பங்களில் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது..