உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? இந்த தேவதைகளிடம் ஒரு வரத்தை கேட்டுத்தான் பாருங்களேன்!

உங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை. அந்த கடவுளும் எனக்கும் துணை நிற்கவில்லை. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் நான் இருக்கின்றேன் என்பவர்களுக்காக இருந்தாலும், அவர்களுடைய பிரச்சினைக்கான தீர்வு இந்த வழிபாட்டின் மூலம் நிச்சயம் கிடைக்கும். அதாவது கஷ்டங்கள் தீர வில்லை, துயரங்களுக்கு முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கின்றது எனும் பட்சத்தில், உங்களுடைய குல தெய்வம் எதுவாக இருந்தாலும், நீங்கள் மனதார இந்த தெய்வத்தை, இந்த முறைப்படி வழிபட்டால் போதும்.

நீங்கள் வேண்டிய வரம், நீங்கள் கேட்ட வரம் உங்களுக்கு உடனே கிடைக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இந்த தேவதைகளிடம் எப்படிப்பட்ட வரத்தைக் கேட்க வேண்டும்? நல்லபடியாக, எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய வரத்தை கேட்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்கக்கூடிய எதையும், உங்கள் மனதில் கூட நினைக்க கூடாது என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடரலாம். வீட்டிலிருந்து கிளம்பும்போது, குலதெய்வ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு இந்த வழிபாட்டைச் செய்ய தொடங்கலாம்.

நம்மில் பல பேருக்கு தெரிந்த, சில பேருக்கு தெரியாத சப்தகன்னியர் வழிபாட்டைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். யாருடைய துணையும் இல்லாமல், கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள், கையேந்தி சப்த கன்னிமார்களை வழிபட்டாலே போதும். உங்களுக்குள் இருக்கக்கூடிய கஷ்டத்திற்கு உடனடி தீர்வு கிடைக்கும். உங்களுடைய வீட்டின் அருகில் சப்த கன்னிமார்கள் சந்நிதி இருக்கும் கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமையில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் சிறப்பானது. எப்படி வழிபடுவது? இதற்கு முதல் தகுதி சுத்தமான, சுயநலம் இல்லாத மனது. இதோடு சேர்ந்த உடல் தூய்மையும் அவசியம் தேவை.

 மஞ்சள் நிற அல்லது சிவப்பு நிற ரவிக்கை துணி கட்டாயம் ஒன்று வேண்டும். ஏழு கன்னிமார்களுக்கும் 7 ஒரு ரூபாய் நாணயங்கள், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் தேங்காய், அர்ச்சனைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லலாம். இந்த பொருட்களை எல்லாம் அங்கே வைத்துவிட்டு உங்களுடைய பெயரைச் சொல்லி ஒரு அர்ச்சனை செய்து எல்லா பொருட்களையும் நீங்கள் மீண்டும் உங்களுடைய வீட்டிற்கு தாராளமாக எடுத்து வரலாம். ஆனால் அந்த ஒரு ரூபாய் நாணயங்களை மட்டும் சப்தகன்னியரில் சந்நிதியிலேயே விட்டுவிட வேண்டும்.

இப்படியாக ஒரே ஒருமுறை சப்தகன்னியர் வழிபாடு செய்து, சப்த கன்னியர்களை பரிபூரணமாக நம்பி, உங்களது கஷ்டத்தை சொல்லி அதற்கான தீர்வை தரவேண்டும் என்று மனமுருகி கேட்டாலே போதும். உங்களுடைய பிரச்சனை அன்றைக்கே முடிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு சக்தி இந்த சப்த கன்னியர்களுக்கு உண்டு. அதாவது, விதியால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நன்மை கிடைக்காமல் இருக்கும் பட்சத்திலும், அந்த விதியால் ஏற்படும் பிரச்சனைகளை கூட, சில சமயங்களில் இந்த கன்னிமார்கள் தடுத்து விடுவார்களாம்.

Saptha Kannimar ஒருமுறை இந்த வழிபாட்டை செய்து சப்த கன்னிகளின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்று விட்டால், நீங்கள் கேட்டாலும் கேட்கவில்லை என்றாலும் உங்களை பாதுகாக்க உங்களுக்கான வரத்தை அள்ளிக் கொடுக்க சப்தகன்னியர்கள் உங்களுடனே தங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here