நம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க கூடாத இந்த சில பொருட்கள்

உலகிலேயே புண்ணியத்தை சேர்க்க கூடிய ஒரு வார்த்தை என்றால் அது ‘தானம்’ என்றால் மிகையாகாது. தானம் என்பது புண்ணியத்தை கொடுப்பது தான் என்றாலும் அதிலும் விதிவிலக்காக சில பொருட்களை தானம் கொடுக்க கூடாது என்பது நியதியாக இருக்கின்றது.

இந்த பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கும் பொழுது நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு அசுப காரியங்கள் நடக்கும் பொழுது மனம் உறுத்தல் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயமாக இருக்கும். அப்படி என்ன பொருட்களை தானம் செய்யக்கூடாது? ஏன் செய்யக்கூடாது? என்பது தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மன்னர் காலம் முதல் நம் முன்னோர்கள் காலம் வரை உண்மையான பொக்கிஷமாக கருதப்பட்டது பூஜை பொருட்கள் தான். பூஜை செய்ய பயன்படுத்திய பொருட்களை யாரும் யாருக்கும் தானமாக கொடுப்பதில்லை. அவற்றை ஒரு பொக்கிஷமாக நினைத்து காலம் காலமாக தங்களுடனேயே வைத்துக் கொண்டிருப்பார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா?

பூஜை செய்யும் பொழுது இறையாற்றல் அங்கு முழுமையாக நிறைந்து இருக்கும். தெய்வ விக்ரகங்களுக்கு எப்படி இறையாற்றலை கொடுக்கக் கூடிய அதிர்வலைகள் இருக்கின்றதோ! அதே போல பூஜை பொருட்களுக்கும் இறையாற்றலை வெளியிடக் கூடிய அதிர்வலைகள் உண்டு. வீட்டில் நாம் பூஜைகள் செய்யும் பொழுது எழும் மணியோசை மற்றும் மந்திரங்கள் தொடர்ந்து அந்த பூஜை பொருட்கள் ஈர்த்துக் கொள்வதால் அதில் தெய்வீக ஆற்றல் பொதிந்து இருக்கும்.

இந்தக் காரணத்தினால் தான் அவர்கள் அதனை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். இப்பொழுது இருக்கும் நாம் வீட்டில் இருக்கும் போது பொருட்களை யாருக்கும் தானம் செய்யக் கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிலர் புதிய பூஜை பொருட்கள் வாங்கி வைத்திருப்பார்கள். அதனால் பழைய பூஜை பொருட்களை என்ன செய்வது? என்று தெரியாமல் யாராவது கேட்டால் அவர்களுக்கு தானமாக கொடுத்து விடுவார்கள்.

பூஜை பொருட்கள் மற்றவர்களுக்கு தானம் செய்த பின் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் குறைவதாக பலரும் உணர்ந்து இருக்கலாம். இதனால் தான் அப்பொருட்களை தானம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

சரி, அப்படி என்றால் பழைய பூஜை பொருட்களை என்ன செய்வது? உங்களிடம் இருக்கும் பழைய பூஜை பொருட்களை நீங்களும் பொக்கிஷமாக பாதுகாத்து சுத்தமான துணியில் மூட்டையாக கட்டி எங்காவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். உங்கள் காலத்திற்கு பிறகு அதனை மற்றவர்கள் பயன்படுத்தலாம்.

அல்லது நீங்கள் புதிய பூஜை பொருட்கள் வாங்கும் பொழுது பழைய பூஜை பொருட்களை கொடுத்து விட்டு மாற்றிக் கொள்ளலாம். பழைய பூஜைப் பொருட்களை கொடுத்து புதிதாக பூஜை பொருட்களை வாங்குவதில் எந்த ஒரு தோஷமும் இல்லை. பித்தளை, செம்பு என்று நீங்கள் எந்த உலோகத்தில் பூஜைப் பொருட்களை வைத்திருந்தாலும் அவற்றை எந்த ஒரு காரணம் கொண்டும் நீங்கள் மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விடக் கூடாது.

புதிதாக பூஜை பொருட்களை மற்றவர்களுக்கு வாங்கி தாராளமாக நீங்கள் பரிசளிக்கலாம். அதிலும் குறிப்பாக புதிய பூஜை பொருட்களை பெண்களுக்கு தானம் கொடுப்பதால் குல விருத்தியை உண்டு பண்ணக்கூடிய நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here