செல்ல பிராணிகள் மீது எல்லோருக்கும் அலாதி பிரியம் இருக்கும் என்பது உண்மைதான். அதற்காக இப்படியா என்று கேட்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியை சேர்ந்த ஒருவர் தாம் வளர்த்து வரும் பூனை மீது மிகவும் பிரியம் கொண்டவர். ஆனால் தான் மறைந்த பிறகு அந்த பூனையை உடன் இருப்போர் சரியாக பார்த்துக் கொள்வார்களா என்பது சந்தேகம்.
அதனால் அந்த பூனை பெயரில் தன்னுடைய சொத்தில் இருந்து ரூ.36 கோடியை எழுதி வைத்துவிட்டார். தன் மறைவுக்கு பிறகு அந்த பூனை நன்றாக வாழ வேண்டும் என்பது தான் அவர் விருப்பம்.
அவர் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் அந்த பூனையை எடுத்து வளப்பவர் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த பூனை உலகின் பணக்கார பூனை. ஆனால் செல்ல பிராணிகள் மீது சொத்தை எழுதி வைப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே!