மகளின் படுக்கையறையை எட்டிப்பார்த்த இளைஞரை துரத்திப் பிடித்த தாய்.

தன் மகளின் படுக்கையறையை எட்டி பார்த்த இளைஞரை துரத்தி சென்று தாய் பிடித்துள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகள் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பெண் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஓர் இளைஞர் வீட்டில் தன் மகனின் படுக்கை அறையை எட்டிப் பார்த்ததைக் கண்டு கோபமடைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண், அந்த நபரை விரட்டி  மடக்கிப் பிடிக்க முனைந்தார். ஆனால், அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்ட்மெடுத்தார்.

இருப்பினும் அந்த நபரை பிடிப்பதிலேயே குறியாக இருந்த பெண் அவரை துரத்தி சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், “என் குழந்தை தான் என்னுடைய உலகம். அவளைக் காப்பாற்றுவது என்னுடைய கடமை, அவளுக்காக நன் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here