செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி… இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஒசாகா !

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் ஒசாகா, செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதிச்சுற்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டார் உலகின் நம்பர் 3 வீராங்கனை ஒசாகா. போட்டி தொடங்கியதுமே விறுவிறுப்பு கூடியது.

ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்த இப்போட்டியில் 6-3, 6-4 என நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தினார் ஒசாகா. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ஒசாகா.

மேலும் நான்காவது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியவர் ஒசாகா என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

அதேநேரத்தில் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ், 24ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்காக மேலும் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

செரீனா வில்லியம்ஸ் இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

கடைசி நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் தோல்வி அடைந்த செரீனா, கடந்த ஆண்டு நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார். அடுத்த கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வரும் மே 24 முதல் தொடங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here