கொரோனா வைரசின் பிறப்பிடம் ஏன் அமெரிக்காவாக இருக்கக் கூடாது ?

 – சோற்றில் மறைந்த பூசணிக்காய்- சீனா

சீனாவின் வூகான் நகரில் 2019 டிசம்பரில் கொரோனா வைரசின் பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டன. வூகானில் உள்ள விலங்கு உணவு விற்பனை மையமொன்றில் இருந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
சீனா முன்கூட்டியே அறிவிக்க தவறிவிட்டதாக அமெரிக்கா நேரடியாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் சீனாவே கொரோனாவுக்கான உற்பத்தி மையம் ஆக இருந்துள்ளது என அமெரிக்கா அறிவித்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழப்புக்களை கொண்ட நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனாவில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் சீனாவில் எந்தவொரு விலங்கினத்தில் இருந்தும் கொரோனா பரவியதற்கான சான்று எதுவும் இல்லை என மருத்துவ வல்லுனர் குழு தெரிவித்தது.

இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கான திட்ட தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து மனித இனத்திற்கு வைரசானது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது சாத்தியமில்லை.

வூகானின் வைராலஜி அறிவியல் மையத்தில் ஆய்வு மேற்கொண்டதில் ஆய்வகத்தில் இருந்து வைரசானது தப்பி வெளியே செல்வதற்கான சாத்தியம் இல்லை என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புலனாய்வில் சீன அரசின் தலையீட்டிற்கான சாத்தியம் உள்ளது என குற்றச்சாட்டு எழுப்பிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிபுணர்களின் ஆய்வு முடிவுகளை சாடினார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், கொரோனா வைரசின் பிறப்பிடம் ஏன் அமெரிக்காவாக இருக்கக் கூடாது. அதற்கான சான்றுகளை பற்றி ஆய்வை அமெரிக்காவில் செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பிடம் சீனா கூறியுள்ளது.சீனாவை போல அமெரிக்காவும் உலக நன்மைக்காக நல்ல விதத்தில், அறிவியல் அடிப்படையில் மற்றும் ஒத்துழைக்கும் வகையில் நடந்து கொள்ளும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். கொரோனாவின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் சர்வதேச முயற்சிகளின் கவனம் தற்பொழுது அமெரிக்காவின் மீது உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதன்படி இதுவரை சீனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்த அமெரிக்காவுக்கு சீனா சரியான பதிலடியை கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here