மதுரை ஆவினில் பால் வினியோக முறை டிஜிட்டல் மயமாகிறது;

– டப்பாக்களுக்கு ‘செக்’

மதுரை மதுரை ஆவினில் டெப்போக்களுக்கு பால் வினியோகம் செய்யும் முறை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் பால் டப்பாக்கள் மாயமாவது தடுக்கப்படும்.மதுரையில் 200 மி., அரை மற்றும் ஒரு லிட்.,
பால் பாக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் டப்பாக்களில் (ஒரு டப்பாவின் கொள்ளளவு 12 லிட்., பாக்கெட்டுகள்) அடைக்கப்பட்டு 1.75 லிட்., பால் விற்பனை செய்யப்படுகிறது.இப்பாக்கெட்டுகள் 50க்கும் மேற்பட்ட வேன்கள் மூலம் டெப்போக்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன. வேன்கள் திரும்பும் போது டப்பாக்கள் மாயமாவது தொடர்கிறது.
இதை தடுக்க வினியோக முறையில் ‘ஆர்.எப்.ஐ.,’ (ரேடியோ பிரிக்குவன்ஸி ஐ.டி.,) தொழில் நுட்பத்தில் ‘சிம்கார்டு’ அளவில் ‘சிப்’கள் பால் டப்பாக்களில் பொருத்தப்பட்டு, ‘பார்கோடிங்’ உருவாக்கி அவற்றை ‘ஸ்கேன்’ செய்யப்படும்.
வேன் டிரைவர்களுக்கும் ‘பார்கோடிங்’ ஐ.டி., கார்டு வழங்கப்படும். வினியோகம் முடிந்து ஆவினுக்கு வேன் திரும்பும்போது மீண்டும்’ஸ்கேன்’ செய்யும்போது டப்பா மாயமாவது கண்டுபிடிக்கப்படும். டப்பா மறைத்து வைக்கப்பட்டுள்ளதும் தெரிந்துவிடும்.
இதன் மூலம் மாயமாகும் பால் டப்பாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.பொறியாளர்ஒருவர் கூறுகையில், “இந்த டிஜிட்டல் முறை அமல்படுத்த கமிஷனர் நந்தகோபால் அனுமதி பெறப்பட்டுள்ளது. 15 நாட்களில் அமல்படுத்தப்படும். பலபிரிவுகளில் டிஜிட்டல் முறை கொண்டுவர பரிசீலிக்கப்படுகிறது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here